திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இடத்தகராறில் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன், தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்து, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் பழனிச்சாமி என்பவருக்கு தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த குண்டை அகற்றினர்.
மற்றொரு நபரான ராமபட்டினம்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி(57) என்பவருக்கு மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று(நவ.16) அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுப்பிரமணியனுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் மார்பு பகுதியிலிருந்த குண்டை அகற்றினர். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி சுப்பிரமணியன் உயிரழந்தார்.