தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிக்கன் கடையில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது - thiruvannamalai district

திருவண்ணாமலை: சிக்கன் கடையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லால் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கல்லால் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

By

Published : Oct 16, 2020, 11:54 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் டாஸ்மார்க் கடை அருகே உள்ள சிக்கன் கடையில் ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த குருபரன் (20), தீனா (20) ஆகிய இருவரும் சிக்கன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்பு கலைந்து சென்றபோது, கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிழற்குடை அருகே இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியது. உடனே தீனா அருகே இருந்த கல்லை எடுத்து குருபரன் தலையில் தாக்கினார்.

மயக்கநிலையில் இருந்த குருபரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூருவில் ரூ.50-க்கு கஞ்சா சாக்லேட்!

ABOUT THE AUTHOR

...view details