திருவள்ளூர்:புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறை அலுவலர் எனக்கூறி காதலர்களை மிரட்டி பணம் பறித்துவந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த மணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பணம், கைpபேசி ஆகியவற்றை பறித்த அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரளித்த பெண்ணிடம் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தான் திருமணத்துக்கு மீறிய உறவுடன் இருந்தபோது, அங்கு வந்த அந்த அடையாளம் தெரியாத நபர், தான் காவல் துறை அலுவலர் எனக்கூறி மிரட்டி, தன் கையிலிருந்த பணம், கைப்பேசியைப் பறித்து சென்றதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிச்சைமணியை கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பூங்கா, மைதானம் உள்ளிட்ட இடங்களில் தனியாக இருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவுகொண்டிருப்பவர்களைக் கண்டறிந்து, காவலர் எனக்கூறி மிரட்டி பணம் பறித்து வந்ததும், அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.