சென்னை திருவிக நகர், தீட்டி தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு மாதவன் (17) என்ற மகன் உள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். சில மாதங்களாகவே மாதவன், ஆன்லைன் மூலம் வகுப்புகளில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவன் இன்று (அக்.29) மாலை 5 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.