தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மண பந்தத்தை தாண்டிய உறவுக்கு இடையூறு: குழந்தை கொலை... இருவர் கைது! - arrested lovers

நாகப்பட்டினம்: மண பந்தத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்று தப்பிக்க முயன்ற இருவரை வேளாங்கண்ணி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

murder
murder

By

Published : Sep 14, 2020, 2:05 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (30). ஓட்டுநரான இவர் கடந்த 10ஆம் தேதி ஒரு பெண், 3 வயது பெண் குழந்தையுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஒரு லாட்ஜில் தங்கியுள்ளார். இந்நிலையில், குழந்தை மாடியிலிருந்து விழுந்து அடிபட்டதாகக் கூறி நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு உடல்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் குழந்தையின் உடலை மருத்துவமனையில் விட்டுவிட்டு ராமதாசும் அவருடன் வந்த பெண்ணும் தலைமறைவாகினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி காவல் துறையினர், ராமதாஸ் மற்றும் அவருடன் வந்த பெண்ணை தேடிவந்த நிலையில், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி எழிலரசி (28). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார், 3 வயதில் மனுஸ்ரீ என்ற மகள் இருந்தார். இதனிடையே, மகேந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். கணவனை இழந்த எழிலரசிக்கு, ராமதாசுடன் ஒரு ஆண்டுக்கு முன்பு தொலைபேசி மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வந்த ராமதாசும், எழிலரசியும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது இருவரும் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, குழந்தை மனுஸ்ரீ இடையூறு செய்ததால், கோபத்தில் ராமதாஸ் குழந்தையை எட்டி உதைத்துள்ளார். இதில், மயங்கி விழுந்த மனுஸ்ரீ இறந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் குழந்தையின் உடலை வாங்காமல் தப்பிச் சென்றது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

மேலும், எழிலரசி, ராமதாசையும் கைதுசெய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details