தமிழ்நாடு

tamil nadu

வேலை பறிபோனதால் நகராட்சி தற்காலிகப் பணியாளர் தற்கொலை

By

Published : Dec 20, 2020, 10:34 AM IST

Updated : Dec 20, 2020, 10:41 AM IST

திருப்பூர் : முன்னறிவிப்பின்றி வேலை பறிக்கப்பட்டதால், பெண் நகராட்சி தற்காலிகப் பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Municipality labour Suicide in thiruppathur
Municipality labour Suicide in thiruppathur

மூலனூர் வட்டம், கருங்காளிவலசுவைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி அஜிதா. இவர்திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நகராட்சி சார்பாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

அஜிதாவிற்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அருண் பிரபாகரன் அவரைத் தகாத வார்த்தையால் திட்டி, பணி நீக்கம் செய்துள்ளார். இதனால் அஜிதா மன வேதனையில் இருந்துள்ளார்.

தற்கொலை எண்ணம் தோன்றினால் ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள்

இச்சூழலில், நேற்று முன் தினம் (டிச.19) தனது வீட்டின் மேற்கூரையில் தூக்கு மாட்டி அஜிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, அவரது கணவர் சக்திவேல் மூலனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மூலனூர் காவல் துறையினர், அஜிதாவின் உடலைக் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அஜிதாவின் உறவினர்கள், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அஜிதாவின் குடும்பத்திற்கு உரிய நீதி வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Dec 20, 2020, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details