தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு சிறை! - மனநலம்

அரியலூர்: கயர்லாபாத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

rape

By

Published : May 7, 2019, 10:01 AM IST

அரியலூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்ராஜன். எலக்ட்ரீசியனான இவர், அரியலூர் அருகேயுள்ள கயர்லாபாத் பகுதியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெண்ணின் தாயார், அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது பழனிவேல்ராஜன் மனநலம் பாதித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபருக்கு சிறை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பழனிவேல் ராஜனை தாக்கியுள்ளனர். மேலும், கயர்லாபாத் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பழனிவேல்ராஜனை அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பழனிவேல்ராஜனை வருகின்ற 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details