தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது! - விசாரணை

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

posco arrest
posco arrest

By

Published : Oct 15, 2020, 5:12 PM IST

மதுரை:மதுரை பாலமேடு அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 12ஆவது படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்த மாணவி விஷயத்தை வெளியில் கூறாததால், அந்த இளைஞர் பல முறை மாணவியை மிரட்டி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்ளுக்கு முன் மாணவி வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பாலமேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

காவலர்களின் விசாரணையில், மாணவியை அந்த இளைஞர் கடத்திச் சென்று உறவினர் வீட்டில் வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மாணவியை மீட்ட காவலர்கள், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க :முரளிதரன் ஒரு இனத்துரோகி, 800 படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் - பாரதிராஜா கடிதம்

ABOUT THE AUTHOR

...view details