கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் பெரியசாமி என்பவர்,அவரது கட்சிக்காரருடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்போது அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த சுந்தரம் என்பவர் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்புடைய செய்தித்தாள்கள் இதனை எதிர்த்து கேள்வி கேட்ட வழக்கறிஞர் பெரியசாமியை, சுந்தரம் சரமாரியாக தாக்கியுள்ளார் . அவர் தாக்கியதில் வழக்கறிஞரின் முகத்தில் இரத்தம் வடிந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் இந்த புகைப்படத்தை நேரடியாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் காட்டி முறையிட்டார்.
இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று உதவி ஆய்வாளர் சுந்தரம், வழக்கறிஞர் பெரியசாமி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்பொழுது உதவி ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக பெரியசாமி நீதிபதியிடம் தெரிவித்தார்.
விசாரணைக்காக வந்திருந்த வழக்கறிஞர், உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம் இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் பெரியசாமியை எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளிக்குமாறு தெரிவித்தார். இதனிடையே சுந்தரத்துக்கும், பெரியசாமிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்திருந்த காவல் துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி வாக்குவாதம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.