தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வாணியம்பாடி கொலை வழக்கு: இருவர் கைது! - குற்றச் சம்பவங்கள்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணன் மற்றும் அவரது பேரனை வெட்டிக்கொலை செய்த தம்பியையும்,அவரது மகனையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாணியம்பாடி கொலை வழக்கு
வாணியம்பாடி கொலை வழக்கு

By

Published : Nov 6, 2020, 12:21 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (52). இவரது சகோதரர் சாம்ராஜ். இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்குமுன், இறந்த போது தங்களுக்குச் சொந்தமான 2.70 ஏக்கர் விவசாய நிலத்தை சரிபாதியாக பிரித்து விவசாயம் செய்து கொள்ளும்படி இருவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தந்தை இறந்த சில மாதங்களில் சாம்ராஜ், தனது அண்ணன் பெருமாளுக்குத் தெரியாமல் வருவாய்த் துறையினரிடம், 'தன்னுடைய தந்தைக்கு தான் மட்டும் தான் ஒரே வாரிசு' எனக்கூறி போலியான வாரிசு சான்றிதழ் பெற்று, அதனை கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடி கொலை வழக்கு

இதனை அறிந்த பெருமாள், தனது தம்பியிடம் இதுகுறித்து கேட்டபோது ஆரம்பித்த நிலத்தகராறு, தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடந்த 4 ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இதே பிரச்னையில் ஏற்பட்ட மோதலில், பெருமாளின் மகன் சுரேஷ் தாக்கியதில் சாம்ராஜின் மண்டை உடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும், சுரேஷ் தண்டனைப் பெற்று, கடந்த சில மாதங்களுக்குமுன் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நிலத்தைப் பிரிப்பது, கொடுப்பது சம்பந்தமாக வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு நேற்று(நவ .5) சர்வேயர் மூலமாக நிலத்தை இருவருக்கும் பிரித்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டு வந்த நிலையில், அதிகாலையில் பெருமாள் தனது பேரன் சந்துருவை (10) உடன்வைத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் கொத்தகோட்டை பகுதியில் உள்ள அரசு பால் கொள்முதல் நிலையத்திற்குப் பால் கொண்டு செல்லும் வழியில், காரில் வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் பெருமாளை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனைப் பார்த்து தடுக்க முயன்ற அவரது 10 வயது பேரன் சந்துருவையும்; தலை உள்ளிட்டப் பகுதிகளில் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில், பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த சிறுவன் சந்துருவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறுவன் சந்துருவும் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான காவல் துறையினர் பெருமாளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலை சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் கொலை சம்பந்தமாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பளார் விஜயகுமார் உத்தரவின் பேரில், வாணியம்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்துள்ளனர்.

கொத்தகோட்டை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெருமாளின் தம்பி சாம்ராஜ், அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணன் தம்பிக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலத்தகராறில், தங்களால் நிம்மதியாக வாழ முடியாததால் அண்ணன் பெருமாளை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நிம்மியம்பட்டு சந்தையில் கத்தி ஒன்றை வாங்கி வந்து தனது மகன் ராஜ்குமாரிடம் கொடுத்ததாக சாம்ராஜ் கூறியுள்ளார். மேலும் சம்பவத்தன்று பெருமாள் பால் கொள்முதல் செய்வதற்காக தயாராவதற்கு முன்கூட்டியே கத்தியுடன் சென்று வரும் வழியில் காத்திருந்து தனது பெரியப்பா, தம்பி மகன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக ராஜ்குமார் காவல் துறையினரின் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாணியம்பாடி அருகே சொத்துக்காக சொந்த அண்ணன் மற்றும் பேரன் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பியும், அவரது மகனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருட்டை தடுக்க பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details