தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கழிவுநீரால் வந்த தகராறு: இளம்பெண்ணை குத்திக்கொன்ற அண்டை வீட்டுக்காரர்! - கொல்லம் கொலை

கழிவுநீரை வெளியே விடுவது தொடர்பாக பக்கத்து வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 24 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் அவரது தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது.

kerala kollam young abirami murder
kerala kollam young abirami murder

By

Published : Oct 30, 2020, 3:32 PM IST

கொல்லம் (கேரளா): கழிவுநீர் தகராறில் அண்டை வீட்டு இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள உளியகோவில் பகுதியைச் சேர்ந்தவர் லீனா. இவரது மகள் அபிராமி (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் உமேஷ் பாபு என்பவர் வசித்துவருகிறார். உமேஷ் பாபுவின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் லீனாவின் வீட்டருகே திறந்துவிடப்பட்டுள்ளது.

கேரளா தங்க கடத்தல் வழக்கு: முன்னாள் முதன்மைச் செயலாளருக்கு 7 நாள் காவல்!

இது தொடர்பாக இவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இச்சூழலில் சில தினங்களுக்கு முன் இது குறித்து அபிராமி கொல்லம் கிழக்கு காவல் துறையினரிடம் புகாரளித்தார்.

இதையடுத்து காவல் துறையினர் இரு வீட்டினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கழிவுநீரை வீட்டுக்கு வெளியே விடக் கூடாது என்று உமேஷ் பாபுவிடம் காவல் துறையினர் கூறி எச்சரித்து அனுப்பினர்.

தன்னை காவல் நிலையத்திற்கு வரவழைத்த அபிராமியின் குடும்பத்தினர் மீது உமேஷ் பாபுவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இச்சூழலில் நேற்றிரவு கத்தியுடன் லீனாவின் வீட்டிற்குச் சென்ற உமேஷ் பாபு, லீனா, அபிராமியுடன் தகராறில் ஈடுபட்டார்.

அந்தச் சமயத்தில் திடீரென கத்தியை எடுத்த உமேஷ் பாபு, அபிராமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த லீனாவையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உமேஷ் பாபுவிடமிருந்து கத்தி தவறி கீழே விழுந்தது.

திருவள்ளூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணம் திருட்டு!

கத்தியின் மேல் அவர் விழுந்தார். இதில் உமேஷ் பாபுவுக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த கொல்லம் காவல் துறையினர் விரைந்துசென்று காயமடைந்த மூன்று பேரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அபிராமி சிகிச்சைப் பலனின்றி இறந்தார். லீனாவுக்கும், உமேஷ் பாபுவுக்கும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details