திருவனந்தபுரம் (கேரளா):தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.
கேரளா தங்க கடத்தல் வழக்கு: அமலாக்கத் துறையினரின் பிடியில் சிவசங்கர்! - தங்க கடத்தல் வழக்கு விவரம்
கேரளா தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறது.
Kerala Gold scam case M Sivasankar
தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிவசங்கரை, இன்று அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். முன்னதாக, கேரளா உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் தாக்கல் செய்திருந்தமுன்பிணை மனுநிராகரிக்கப்பட்டது.
தங்க கடத்தல் வழக்கில், இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.