கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் செல்லப்ப கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி.
கார்த்திக்கின் சலவைத் தொழிலுக்கு அவரது மனைவி உறுதுணையாக இருந்து வருகிறார். இந்தத் தம்பதியருக்கு மிதுன் என்ற இரண்டு வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று (07-01-2019) கார்த்திக், தனது மனைவியுடன் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் நைசாக பேச்சுக் கொடுத்தனர். ஒருகட்டத்தில் அக்கும்பல் மது அருந்த அழைக்க, மதுபானக்கடைக்கு அவர்களுடன் நடையைக் கட்டினார், கார்த்திக்.
பின் மூக்குமுட்டக் குடித்த கார்த்திக் ஒருகட்டத்தில் மயங்கி விழுந்தார்.
மதுவால் மகனைத் தொலைத்த தந்தை
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தக் கும்பலில் ஒருவர் திரும்பி வந்து கார்த்திக் போதையில் மதுபானக் கடையில் மயங்கி கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். பின் அந்த நபர், கார்த்திக்கின் இரண்டு வயது ஆண் குழந்தையை ஆற்றங்கரையில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கணவரும் மகனும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுப் பொருளில் கலப்படம் - உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை