தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருச்சியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை! - பெண் தற்கொலை

திருச்சி: சிறுகனூர் அருகே கணவர் இழந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி தீக்குளித்து தற்கொலை

By

Published : Aug 13, 2019, 9:54 PM IST

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் முத்துச்செல்வன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இளம் வயதில் கணவனை இழந்து மிக துயரத்தில் இருந்த பிரியாவிற்கு உறவினர்கள் ஆறுதலாக இருந்துவந்தனர். அதனால் குழந்தைகளை வைத்துகொண்டு சிறுது காலம் கவலைகள் மறந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியா நேற்று மாலை தன் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவரின் கணவன் உடல் அடக்கம் செய்த மயானத்திற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார், இதனால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட பிரியா

தகவல் அறிந்து சிறுகனூர் காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாயின் உடலை பார்த்து மூன்று குழந்தைகளும் கதறி அழுத சம்பவம் கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details