தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குடிபோதையில் தகராறு: ஒருவர் கொலை! - chennai crime

சென்னை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

In Chennai one killed, accused arrest

By

Published : Oct 28, 2019, 5:14 PM IST

Updated : Oct 28, 2019, 5:29 PM IST

சென்னை ரோட்டரி நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவருகிறார்.

கார்த்திக் நேற்று நள்ளிரவு அவரது நண்பர் ராஜேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து நொச்சி நகர்ப் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பூபாலன் (23) என்பவருக்கும் கார்த்திக்கின் நண்பன் ராஜேஷுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே பூபாலன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜேஷ் மொபைலை பறித்துக் கொண்டு அவரை துரத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று கார்த்தி வீட்டிற்கு மொபைலை வாங்கிச் செல்ல ராஜேஷ், கார்த்திக்நொச்சி நகருக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பூபாலன்-அவனது நண்பர்கள் கார்த்திக், ராஜேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பூபாலன் அவனது நண்பர் சூர்யா, இருவருடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கார்த்திக்

இதில் மயக்கமடைந்த கார்த்திக்கை, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். அங்கு கார்த்திக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கார்த்திக்கை கத்தியால் குத்திக்கொலை செய்த பூபாலன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Oct 28, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details