தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மனைவியின் திருமணம் மீறிய உறவால் கணவர் தற்கொலை - திருப்பூரில் மனைவியின் திருமணம் மீறிய உறவால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: தாராபுரம் அருகே மனைவியின் திருமணம் மீறிய உறவால் மனமுடைந்த கணவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

By

Published : Feb 11, 2020, 6:28 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்பவர் சுதா (34). இவரது கணவர் வேலுச்சாமி (49), கார் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். இவர்களுக்கு சுவேதா என்ற மகளும், அகில் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மாம்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுரேஷ் என்பவருடன் சுதா நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வேலுச்சாமி, தனது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் சுதா வசித்து வந்துள்ளார். இதனிடையே, சுரேஷ் - சுதா அடிக்கடி சந்தித்து பேசுவதை பார்த்த சிலர், இதுகுறித்து வேலுச்சாமியிடம் விசாரித்தனர்.

இதனால் மனமுடைந்த வேலுச்சாமி, நேற்று முன்தினம் (பிப். 09) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்த தாராபுரம் காவல் துறையினர், வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

அதைத் தொடர்ந்து, வேலுச்சாமி எழுதிய கடிதம் ஒன்றை காவல் துறையினர் கண்டறிந்தனர். அதில், தனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், சுதாவுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details