தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருமணமான 15ஆம் நாளே மனைவியை துரத்திய கணவன்!

சென்னை: காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் செல்போனில் இருந்ததால் திருமணமாகி 15 நாள்களே ஆன மனைவியை வீட்டை விட்டு கணவர் துரத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

breakup
breakup

By

Published : Jan 9, 2020, 3:17 PM IST

வடபழனி செக்டர் காலனியில் வசித்துவருபவர் அஜித்குமார் (21). இவர் அதே பகுதியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் பணிபுரிந்துவருகிறார். இவரும், அதே மாலில் வேலைபார்க்கும் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த ரூபா (21) என்பவரும் காதலித்துவந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, 15 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ரூபா, வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது கணவர் ஜாதி ரீதியாகத் தன்னைத் திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாகக் கூறியுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், அஜித் குமாரிடம் விசாரணை செய்தபோது, ரூபா ஏற்கனவே வேறு ஒரு நபரை காதலித்துள்ளதாகவும், அவரது செல்போனில் முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார்

ABOUT THE AUTHOR

...view details