தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குடிக்க பணம் தர மறுத்த மனைவி; கொடூரமான முறையில் கொன்ற கணவன்! - திருவாரூர் குற்றம்

கணவனுக்கு குடிக்க பணம் தராமல் வயலுக்கு ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளார் மாரியம்மாள். கொலைவெறியுடன் அவரைப் பிந்தொடர்ந்துச் சென்ற கணவன், மனைவியை வெட்டி சாய்த்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

husband killed wife for not giving money to drink
husband killed wife for not giving money to drink

By

Published : Sep 25, 2020, 4:45 PM IST

திருவாரூர்:குடிக்க பணம் கொடுக்காத மனைவியை போதையில் அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட வடக்கு தென்பரை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலுச்சாமி (63). இவருக்கு மாரியம்மாள் (57) என்ற மனைவியும், நான்கு மகள்களும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர். பாலுச்சாமி அவ்வப்போது மது அருந்திவிட்டு மாரியம்மாளை அடித்து உதைப்பதோடு தகாத வார்த்தைகளால் திட்டுவார் எனக் கூறப்படுகிறது.

இச்சூழலில், பாலுச்சாமி நேற்று மாலை குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என மாரியம்மாள் கூறிவிட்டு அருகிலுள்ள வயலுக்கு மேய்சலுக்காக ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவப் படுகொலை?

மது அருந்த மனைவி பணம் தராத ஆத்திரத்தில் இருந்த பாலுச்சாமி, தன்னிடம் இருந்த பணத்தில் மது அருந்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கிருந்த அரிவாளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு, வயலுக்குச் சென்று அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயந்து போன பாலுச்சாமி வீட்டுக்கு வந்து அங்கு வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதுக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை காவல் துறையினர் மாரியம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பாலுச்சாமியை மீட்ட காவல் துறையினர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு!

இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். குடிக்க பணம் கொடுக்காத மனைவியை போதையில் அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details