தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காதலனுடன் மகள் சென்றதால் ஆத்திரம் - வீடு சூறை - காதலர்கள்

சென்னை: வீட்டை விட்டுச்சென்று காதலனுடன் மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை ரவுடிகளுடன் சென்று வீட்டை சூறையாடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack
attack

By

Published : Sep 30, 2020, 6:26 PM IST

புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் முரளி. 104ஆவது வார்டு திமுக துணைச் செயலாளரான இவருடைய 19 வயது மகள், கடந்த பத்தாம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், தந்தை முரளி வேப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் அப்பெண்ணை தேடிவந்த காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (20) என்பவரைக் காதலித்து அப்பெண் திருமணம் செய்துகொண்ட தகவலை முரளியிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முரளி நேற்று ஆயுதங்களுடன் 30 ரவுடிகளை அழைத்துக்கொண்டு, சக்திவேலின் உறவினரான அம்சவல்லி என்பவரது வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த இருசக்கர வாகனம், தொலைக்காட்சி, பீரோ உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளார். தனது மகள் எங்கே என்று அம்சவல்லியின் கழுத்தில் கத்தியை வைத்தும் முரளி மிரட்டிக் கேட்டுள்ளார்.

காதலனுடன் மகள் சென்றதால் ஆத்திரம் - வீடு சூறை

இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, வீட்டை அடித்து உடைத்ததாக தினேஷ் குமார், அன்பரசன், பிரபாகரன், நந்தா, சத்தியமூர்த்தி, மனோஜ்குமார், பிரபாகரன் ஆகிய ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள திமுக துணைச் செயலாளர் முரளி உள்பட நான்கு பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞர்; காப்பாற்ற வந்தவர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details