ஸ்ரீநகரில் உள்ள பர்பர்ஷா பாலம் அருகே இன்று காலை காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மத்தியப் பாதுகாப்புப் படையின் பதுங்குக் குழி அருகே வெடிபொருள் ஒன்று இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, அதை எடுத்துப் பார்த்தபோது பழைய நிலையிலான கை எறிகுண்டு என்று தெரியவந்தது.
உடனே வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். கை எறிகுண்டை பத்திரமாக மீட்ட அவர்கள், ராம்பக்ஹ் என்ற இடத்திற்கு அதைக் கொண்டுச் சென்றனர்.