தருமபுரி:கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தருமபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது.
மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்! - குட்கா விநியோகம்
கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி வழியாக சேலம் மாவட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்களைக் கடத்திவந்த மினி டெம்போவை பறிமுதல் செய்த காவல் துறையினர், வாகன ஓட்டுநர், உதவியாளர் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காரிமங்கலம் காவல் துறையினர், நேற்றிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் மினி டெம்போவில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
டெம்போவில் ஏற்றிச் சென்ற 50 மூட்டை குட்கா பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், உதவியாளர் சதீஷ் குமார் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். வாகனத்தின் உரிமையாளர் மணியை கவல் துறையினர் தேடி வருகின்றனர்.