திருவள்ளூர் மாவட்டம் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலை, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை. ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றும் இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு மதுரை சென்றுவிட்டு இன்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின், வீட்டில் இருந்த 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக மருத்துவர் நாடகம்? காவல்துறையினர் தீவிர விசாரணை!
திருவள்ளூர்: வளசரவாக்கம் அருகே 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரிடமே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அங்குள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தபோது, மருத்துவர் தங்கதுரை தனது வீட்டை சில மாதங்கள் முன்பே காலி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, வீட்டை காலி செய்துவிட்டு 150 சவரன் நகைகளை மட்டும் ஏன் விட்டுச் சென்றாரா? அல்லது நகைகள் கொள்ளையடிக்கப்படாமலே கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பதாக நாடகம் ஆடுகிறாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மருத்துவர் தங்கத்துரையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தொடர்ந்து விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.