தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி மதிப்புள்ள நகை பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

By

Published : Aug 28, 2019, 1:41 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் முனாப்(45), புதுக்கோட்டையைச் சேர்ந்த அஸ்கர் அலி(35) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 26 லேப்டாப்களும், 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிக்ரெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த அலுவலர்கள், அவர்களிடம் இருந்து 56 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 410 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அதுபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் அலி(24), சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுல்தான் சையத் இப்ராகிம் (32), அஸ்கர் அலி(25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 59 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 530 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ஒரு கோடியே 39 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 527 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் முனாப், கலந்தர் அலி, புதுக்கோட்டையைச் சேர்ந்த அஸ்கர் அலி, சிவகங்கையைச் சேர்ந்த சபீர்கான் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details