தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்! - இருவர் கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

seized
seized

By

Published : Nov 17, 2020, 7:44 PM IST

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்று வந்த சிறப்பு விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சையத் அபுதாகீர் (34), ராஜ் முகமது (37) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவர்கள் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், உடமைகளை சோதனை செய்த போது எதுவும் சிக்கவில்லை. பின்னர், அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இருவரிடம் இருந்தும் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், பின்னர் 2 பேரையும் சுங்க கைது செய்தனர்.

இதையும் படிங்க: சவுகார்பேட்டை கொலை வழக்கு - மகாராஷ்டிராவில் தனிப்படை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details