ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஆட்டுக்கு தீவனம் சேகரிக்க காட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
சிறுமியின் கூச்சல் கேட்டு அந்தப் பகுதியைச் சென்றவர்கள் அங்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், தான் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை நினைத்து மனமுடைந்த சிறுமி , வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.