தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு.! - சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நடன மங்கையை (டான்ஸர்) கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Gang rape with Mumbai dancer in Bhilai
Gang rape with Mumbai dancer in Bhilai

By

Published : Dec 6, 2019, 1:34 PM IST

சத்தீஷ்கர் மாநிலம் பிலாய் மாவட்டத்தில் உள்ள துர்க் என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் நடன மங்கை சுபேலா தங்கியிருந்தார். அங்கிருந்தப்படி 5 நாட்கள் நடன நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சம்பவத்தன்று நடன நிகழ்ச்சி மேனேஜர் சோனு அவரின் கூட்டாளிகள் கபீர், ராஜ் மற்றும் கமலேஷ் ஆகியோர் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவரை மறைவிடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்லிடப்பேசி மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர்.

இதுதொடர்பாக நடன மங்கை சுபேலா ராய்ப்பூர் ஆஸாத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் தலைமறைவாகி விட்டனர்.
இரண்டு பேர் காவலர்கள் வசம் இருப்பதாகவும், அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது எனவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெய்ப்பூர் ஹோட்டலில் பெண் பாலியல் வன்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details