தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

முப்பரிமாண நண்பர்கள் கதை! நண்பன் கொலை - மற்றொரு நண்பனுக்கு வலைவீச்சு - inquiry

மதுரை: நண்பனை கொலை செய்ய வந்தவரிடமிருந்து காப்பாற்றச் சென்ற இளைஞன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

friend

By

Published : Sep 3, 2019, 11:03 AM IST

மதுரை மாவட்டம் சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ கார்த்திக். இவரும் இவரது உறவினரான காத்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். மேலும், சங்கையா என்பவர் கார்த்திகேயனுக்கு நண்பராவார்.

இதனிடையே, மூவரும் கார்த்திகேயனில் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, செல்வ கார்த்திக்குக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த செல்வ கார்த்திக் தனது உற்ற நண்பன் என்றும் பாராமல் கார்த்திகேயனை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.

கார்த்திகேயனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது

அப்போது, தனது நண்பன் கார்த்திகேயனை காப்பாற்ற முயன்ற சங்கையா மீது சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இதில், சங்கையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.மேலும் படுகாயமடைந்த கார்த்திகேயன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வ கார்த்திக்கை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details