கோவை செல்வபுரம் ஐயுடிபி காலனி பகுதியில் செல்வராஜ், ஆனந்த் ஆகியோர் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பாக செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது சி.சூர்யா (20), ஆர்.சூர்யா (20), மோகன்ராஜ் (22), விக்னேஷ்குமார் (22), விஜயராஜ்(22) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பழிக்குப் பழியாக இரட்டைக் கொலை செய்தது தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முடிந்தது.