தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருடிய பொருளை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறு - வளர்ப்பு நாயை வெட்டி மூவர் வெறிச்செயல்!

திருவள்ளுர்: வழிப்பறி செய்த செல்போனை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு நண்பரை கொலை செய்ய வந்தவர்கள் வளர்ப்பு நாயை வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

cell phone roberry

By

Published : Sep 4, 2019, 11:13 PM IST

சென்னையை அடுத்த போரூரில் உள்ள கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(17). இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டிற்கு குடிபோதையில் அவரது நண்பர்கள் வெங்கட்(19), முத்து(20), அருண்(20) ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். இதையடுத்து, ரவி எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்று அவரது பாட்டி தெரிவித்ததையடுத்து வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளனர்.

ரவி

அப்போது, அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் மூன்று பேரையும் வீட்டிற்குள் விடாமல் கடிப்பது போல் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நாயின் வாயின் இரண்டு பகுதிகளிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த நாய் ரத்தம் சொட்ட, சொட்ட வலியால் துடித்தபடி அங்கும் இங்கும் ஓடியிருக்கிறது.

இதனைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் நாயை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சிகிச்சை முடிந்து நாயை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து போரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரூர் காவல் ஆய்வாளர் சங்கர் நாராயணன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

அதில், ரவி அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், இரவு நேரங்களில் தனியாகச் செல்பவர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் வழிப்பறி செய்த செல்போனை பங்கு போடுவதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், ரவி குடிபோதையில் செல்போனில் மாறி, மாறி ஆபாசமாக பேசிக்கொண்டதன் காரணமாக, மற்றவர்கள் ரவியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

மூன்று பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல் துறையினர் முத்து என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரவி, வெங்கட் ஆகிய இரண்டு பேரை மதுரவாயல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அருண் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details