தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை! - Farmer beaten to death in property dispute

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்தவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Farmer Muder In Aranthangi
Farmer Muder In Aranthangi

By

Published : Jul 31, 2020, 1:41 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் குண்டு (75). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது சகோதரர்கள் சுப்பிரமணியன், நாகலிங்கம் ஆகியோரின் குடும்பத்தாருக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாகப் பிரச்சினை இருந்துவந்தது.

இந்நிலையில், நேற்று காலை குண்டுவிற்கும் அவரது சகோதரர்களின் மகன்களான சண்முகநாதன், செல்வராஜ் ஆகியோருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, சண்முகநாதன், செல்வராஜ் ஆகிய இருவரும் குண்டுவை சராமரியாக தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details