கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூரைச் சேர்தவர் லட்சுமணன். பல ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்த இவரை, கடந்த ஜூலை மாதம் கடத்திச் சென்று கொலை செய்து, தருமபுரி மாவட்டம் - காரிமங்கலத்தில் உள்ள ஏரியில் குழி தோண்டி புதைத்துவிட்டு, அவரிடமிருந்த நூறு பவுன் தங்க நகை, 50 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.
கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்துடன் மனு!
கிருஷ்ணகிரி: நிதி நிறுவன அதிபரை கடத்திக் கொலை செய்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, காவேரிபட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரங்கநாதன் என்பவரை கைது செய்தனர். ஆனால் இந்தக் கொலை வழக்கில் இதுவரை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் காவேரிப்படினம் காவல் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறி லட்சுமணனின் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
மேலும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சுமணனை கொலை செய்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.