திருவனந்தபுரம்: தேசிய விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து புகாரளித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதிய மறுநாளே அவரது நெருங்கிய உதவியாளர் ரவீந்திரன் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்தார்.
கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து அமலாக்கத் துறை, சுங்கத் துறை, என்.ஐ.ஏ. போன்ற அமைப்புகளின் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல், பிற வழக்குகளில் தேசிய விசாரணை அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து புகாரளித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வழக்கில் பிரதியாக முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் ரவீந்திரன் சிகிச்சைப் பெற்று வந்ததால் விசாரணையில் ஆஜராகவில்லை.