மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி சுனில் சர்தார் (54) - கிருஷ்ண சர்தார் (48). இவர் மேற்கு வங்க மாநிலத்தில் வருமான வரித்துறை அலுவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக நேற்று சென்னை வந்த இவர்கள், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதற்காக, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கிருஷ்ண சர்தார் சமையல் செய்வதற்காக சமயலறைக்குச் சென்று எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்துள்ளார்.
கேஸ் பற்றவைக்கும்போது தீ - சிகிச்சைக்காக சென்னை வந்த தம்பதி பலியான சோகம்! - எரிவாயு சிலிண்டர்
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த மேற்கு வங்கத் தம்பதி தங்கியிருந்த அறையில் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீப்பற்றியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது ஏற்கெனவே சிலிண்டரில் கேஸ் கசிந்திருந்ததால், கிருஷ்ண சர்தார் மீது தீப்பற்றிகொண்டது. கிருஷ்ண சர்தாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் சுனில், மனைவி மீது பற்றியத் தீயை அணைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுனில் மீதும் தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் தீ மளமளவென பரவி எரிந்தது. பின்னர் தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இன்று உயிரிழந்தனர். இந்தத் தீவிபத்து நிகழ்வு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.