தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மாணவர்கள் மோதல்: பேருந்து கண்ணாடி உடைப்பு - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர்களைத் தாக்கியும், மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டும் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

attack
attack

By

Published : Mar 12, 2020, 12:04 PM IST

அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்து ’29ஏ’. இந்தப் பேருந்தானது நேற்று மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் அதில் ஏறியுள்ளனர்.

உள்ளே சென்ற அவர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த மாநிலக் கல்லூரி மாணவர்களான மேகநாதன், அபிஷேக், அருண் ஆகியோரை சரமாரியாகத் தாக்கிவிட்டு, பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் விஜயகுமார், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அம்மாணவர்களைத் தேடிவந்த நிலையில், இதில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மகேஷ் குமார் (19), மாரிமுத்து (18), சூர்யா (18), கிஷோர் (19), அன்பு (19) ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கையின் குடும்பப் பிரச்னையைத் தீர்க்க வந்த அண்ணன் கொலை!

ABOUT THE AUTHOR

...view details