தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

100 சிசிடிவி கேமராக்களை வைத்து கொள்ளையர்கள் கைது! - கொள்ளையர்கள்

சென்னை: வீடு புகுந்து திருடிய 4 நபர்களை 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

theft
theft

By

Published : Dec 28, 2019, 8:47 PM IST

அடையாறு இந்திரா நகர் 9ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ராஜேந்திரன். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்த நாள் வீடு திரும்பிய ராஜேந்திரன் உள்ளே வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகாரளித்ததன்பேரில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் சுமார் 100 சிசிடிவிக்களை காவலர்கள் ஆய்வு செய்ததில், சாய்கிருஷ்ணன் (21), பிரபாகரன் (20) , பார்த்திபன்(19), நிர்மல்( 27) ஆகியோர் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களை தனிப்படைக் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பிச்சைக்காரர்களுக்குள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details