சென்னை வில்லிவாக்கத்தில் வழக்குரைஞர் ராஜேஷை, கடந்த 4ஆம் தேதி எட்டு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதன் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி வாணியம்பாடி நீதிமன்றத்தில் ராஜேஷை கொலை செய்ததாக ரவுடி முருகேசன், ரமேஷ், அருண், ஸ்ரீநாத், வைரமணி, ருக்கேஷ்வரன், சஞ்சய், கிஷோர் குமார் ஆகியோர் சரணடைந்தனர்.
இவர்கள் ரவுடி சூழ்ச்சி சுரேஷின் கூட்டாளிகள் என்பதும், அதேசமயம் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜேஷ், எதிரணியான ரவுடி கதிரவன், தொப்பை கணேசன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்குகளை முடித்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த எதிர் தரப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக காத்திருந்து ராஜேஷை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.