தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தம்பிக்கு விரித்த வலையில் சிக்கிய அண்ணன்! கும்பல் வெறிச்செயல்! - வில்லிவாக்கம் பாலாஜி கொலை

நகை திருடுபோன விவகாரத்தில், சீனிவாசனை அவரது நண்பரான சதீஷ் தேடிவந்துள்ளார். இச்சூழலில் சீனிவாசனின் அண்ணன் பாலாஜி சிக்கவே, சதீஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துள்ளனர்.

chennai ambattur balaji murderchennai ambattur balaji murder
chennai ambattur balaji murder

By

Published : Nov 15, 2020, 12:05 PM IST

Updated : Nov 15, 2020, 1:08 PM IST

சென்னை: நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக தம்பிக்கு பதிலாக அண்ணனை கொலை செய்து தப்பியோடிய குமபலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் வர்ணபூச்சு வேலை செய்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இச்சூழலில் பாலாஜி அம்பத்தூர் அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள் பாலாஜியை, வழிமறித்து கத்தியால் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை நடக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு அதே பகுதியில் சதீஷ் - சீனிவாசன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலையாளிகள் சீனிவாசனை தேடி வந்துள்ளனர். அந்த சமயத்தில்தான், அங்கு சிக்கிய சீனிவாசனின் அண்ணன் பாலாஜி கண்டு, அவரை கொன்றுள்ளனர் என்று காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாலாஜியின் தம்பி சீனிவாசன் அத்திப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், அதேபகுதியில் வசித்துவரும் அவரது நண்பரான சதீஷ்குமார் என்பவரின் வீட்டில், நகைகள் தொலைந்து போனது விவகாரத்தில், சீனிவாசனை சந்தேகித்துள்ளார் சதீஷ்.

இச்சூழலில் சீனிவாசனை சதீஷ் தேடி வந்த நிலையில், சீனிவாசனின் அண்ணன் பாலாஜி கண்ணில் படவே, அவரை சதீஷுடன் சேர்ந்து அவரது நண்பர்கள் கொலை செய்துள்ளனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் 2 உதவி ஆணையர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பாலாஜி மீது ஏற்கனவே ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 15, 2020, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details