தமிழ்நாடு முழுவதும் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சைதாப்பேட்டையிலுள்ள காரணீஸ்வரர் கோயிலிலும் சிவராத்திரி சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரஸ்வதி (65), சாந்தி (65 ) ஆகிய இருவரிடம் நான்கு சவரன் நகைகளையும், பல்லாவரத்தைச் சேர்ந்த அபிராமி (25) என்பவரிடமிருந்து 8 சவரன் நகைகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.