தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அசால்ட்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு! - கோவை

கோவை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர்கள் செயின் பறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அசல்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!
அசல்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!

By

Published : Jan 8, 2021, 12:48 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (58) நேற்று (ஜன. 8) கோவை காரமடை காந்தி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை அறுக்க முயற்சி செய்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத விஜயலட்சுமி, தடுக்க முயற்சிக்கவே, 5 பவுன் சங்கிலியில் 4 பவுன் கொள்ளையர்கள் இடமும் 1 பவுன் விஜயலட்சுமியிடமும் சிக்கியது.

அசல்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு காரமடை காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...பறவை காய்ச்சல் எதிரொலி: கடும் சரிவை சந்திக்கும் கறிக்கோழி விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details