புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு நேற்று மாலை நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன்(30) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது நிரவி இரண்டாம் சாலையில் வந்தபோது, எதிரே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மீன் ஏற்றி வந்த மினி வேன் அவர் மீது மோதியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு கால் மணிக்கட்டு துண்டானது.
தாறுமாறாக ஓடிய வேன் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்! - தாறுமாறாக ஓடிய வேன் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்
நாகை: தாறுமாறாக ஓடிய மினி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கிவீசப்பட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும், பலனின்றி அன்புச்செல்வன் உயிரிழந்தார். இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மினி வேனை ஓட்டிவந்த நாகை பாலையூரை சேர்ந்த ஸ்டீபனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: லாவகமாக மிதிவண்டியைத் திருடிய நபர்; சிசிடிவி உதவியால் கைது!