பெங்களூருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் லீவிஸ். இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த 25 கோடி ரூபாய் தேவைப்பட்டதால் வேணு என்பவர் மூலம் சென்னை திருமங்கலத்தில் உள்ள, ஸ்ரீ சக்ரா அசோசியேட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சரவணன், கிருஷ்ணா அயூப், பாஸ்கர் மற்றும் கிரீன்பாக் ஆகியோரை அணுகியுள்ளார்.
தங்கள் நிறுவனத்தின் சான்றிதழை வைத்து குறைந்த வட்டியில் 25 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக அவர்கள் சந்தோஷிடம் கூறியுள்ளனர். மேலும், 25 கோடி ரூபாய் கடனுக்கு கமிஷனாக 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அந்த நால்வரும் சந்தோஷிடம் கூறியுள்ளனர்.