தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் - காவல் துறையில் புகார்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

tasmac
tasmac

By

Published : May 16, 2020, 3:27 PM IST

தமிழ்நாட்டில் மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து டாஸ்மாக் நிறுவனம் பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனை நம்பி பலர் அந்த இணையதளத்தில் ஆன்லைனில் மது வாங்குவதற்காக பணம் கட்டி ஏமாந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலியாக டாஸ்மாக் பெயரில் இணையதளத்தை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரையடுத்து போலி இணையதளத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, டாஸ்மாக் பெயரிலான போலி இணையதளத்தை காவல் துறையினர் உடனடியாக முடக்கினர்.

இதையும் படிங்க: 10 நாள்களில் கரோனாவை குறைப்பதே இலக்கு! - சென்னை மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details