தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஊர்காவல்படை காவலருடன் பிடிபட்ட கஞ்சா லாரி! - coimbatore crime

கோயம்புத்தூர் - பாலக்காடு சாலை பாலத்துறை பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கேரள மாநில லாரியில் ஒன்றரை கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவருடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

covai crime
covai crime

By

Published : Oct 17, 2020, 5:01 PM IST

கோயம்புத்தூர்: ஊர்காவல்படையைச் சேர்ந்தவருடன் இருவர் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் - பாலக்காடு சாலை பாலத்துறை பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள மாநில லாரியில் (KL18B 3798) ஒன்றரை கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர், அவருடன் இருந்த இருவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்களது பெயர் முனீர், செரிஃப், அனாஸ் என்பதும் அதில் செரிஃப் என்பவர் ஊர் காவல் படையில் இருப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா, லாரி ஆகியவற்றைப் பறிமுதல்செய்து மூவர் மீதும் மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details