திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில், ஒரு மாத காலமாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட போதை தடுப்புப் பிரிவு துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான காவல் துறையினர், பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் கடந்த 5 நாட்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பூபதி (65) என்பவர், தனக்குச் சொந்தமான ஏழு சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த துவரைத் தோட்டத்தின் நடுவில் கஞ்சா செடிகளையும் சேர்த்து வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது. அங்கு பயிரிடப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கஞ்சா மற்றும் 40 கஞ்சா செடிகளை காவல் துறையினர் பிடிங்கி, அங்கேயே தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
பின்னர் நிலத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த பூபதியை, ஆலங்காயம் காவல் துறையினர் கைது செய்து போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது! - கஞ்சா செடி வளர்த்தவர் கைது....
திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே துவரைத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
cannabis grower arrested