கர்நாடக மாநிலம் பெங்களுரு சிலிக்கான் சிட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்று, பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கும்பல் ஒன்று திருடி சென்றது. இந்த கும்பல் அருகாமையிலுள்ள பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதுகுறித்து காவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அக்கும்பல் வாடகைக்கு இருசக்கர வாகனம் எடுத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தலையில் இருக்கும் கொண்டைய மறந்த திருடர்கள்.! - ஜி.பி.எஸ். கருவியால் சிக்கிய பெங்களுரு திருடர்கள்
சென்னை: பெங்களுருவில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட வாடகை இரு சக்கர வாகனங்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட கும்பலை காவலர்கள் கோழி அமுக்குவது போல் லபக்கென்று கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
Bounce bikes used to snatch chain... commissioner says its a idiotic act
இதையடுத்து அந்த கும்பலை காவலர்கள் கோழியை அமுக்குவது போல் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய பெங்களுரு நகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், “திருடர்கள் முட்டாள்கள். வாடகை இருசக்கர வாகனத்தில் சென்று திருடியுள்ளனர். அந்த வாகனத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியை அவர்கள் மறந்து விட்டனர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டரில் ஜிபிஎஸ், கேமரா பொருத்தி பயணம் மேற்கொள்ளும் பேராசிரியர் - என்னவா இருக்கும்
Last Updated : Dec 12, 2019, 3:34 PM IST