தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பாஜக நிர்வாகி கொலை: கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - krishnagiri district news

கிருஷ்ணகிரி: பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

murder
murder

By

Published : Sep 16, 2020, 8:49 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதி ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் நேற்றிரவு (செப்.15) படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் டெம்போ முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மாவட்ட செயலாளர் திருமலை பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, பாஜக பிரமுகரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி செயல்பட வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:இரண்டாக பிரியும் அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர்கள் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details