தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.3) காலை 6 மணிக்கு தென்கரையிலுள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசின் உறவினர்கள் குற்றவாளி விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.