சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக வாகனங்கள் இரண்டு ஒரே சமயத்தில் திருடுபோனது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது, ஐந்து நபர்கள் கொண்ட குழு வேறு இடத்தில் திருடிய இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து நிறுத்துவதும், மற்றொறு நபர் தெருவின் உள்ளே சென்று FZ இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் காட்சியும் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் சிசிடிவியை உடைக்கவும் செய்துள்ளனர்.
தனி காவல் நிலையம் வேண்டும்; திருட்டு பயத்தில் மக்கள்! - POLICE
சென்னை: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதி மக்கள், தனி காவல் நிலையம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சி
இதே பகுதியில் கடந்த வாரம் தெரு விளக்கின் மின் இணைப்பை சில சமூக விரோதிகள் துண்டித்துள்ளதாகவும், இரவு காவலர்கள் ரோந்து பணியில் வருவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ள அயப்பாக்கம் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு தனி காவல் நிலையம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.