தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கர்நாடகாவில் 12,000 N95 போலி உயர் ரக முகக்கவசங்கள் பறிமுதல் - கொரோனா பாதிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

N95 masks
N95 masks

By

Published : Mar 31, 2020, 8:53 AM IST

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமெடுத்துவரும் நிலையில் கை சுத்திகரிப்பான்கள், முகக்கவசங்கள் ஆங்காங்கே பதுக்கப்பட்டுவருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முகக்கவசங்கள் பதுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று அதிரடி சோதனைமேற்கொண்டனர். அப்போது, 12 ஆயிரம் போலி N95 (உயர் ரகம்) முகக்கவசங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், இது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

N95 முகக்கவசங்கள் என்பது மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தும் உயர் ரக கவசங்களாகும்.

இதையும் படிங்க: 27.5 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.611 கோடி செலுத்திய யோகி ஆதித்யநாத்!

ABOUT THE AUTHOR

...view details