அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அயோத்தி வழக்கு: ஆகஸ்ட் 15 அன்று இறுதி அறிக்கை வேண்டும் - உச்சநீதிமன்றம் - supreme court hearing update
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கபட்டுள்ள சமரசக் குழு ஆகஸ்ட் 15 அன்று இறுதி அறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட இப்ராஹிம் லலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை அமைத்து அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த சமரச குழு மீது நம்பிக்கை இல்லை, அந்த குழு மந்தமாகச் செயல்படுகிறது என இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகார் குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘இந்த சமரச குழு ஆகஸ்ட் 15 அன்று இறுதி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இம்மாதம் 18ஆம் தேதி இடைக்கால அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும்’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.